கரூர் துயர சம்பவத்தில் பலியானவர்களை உடற்கூறு ஆய்வு செய்தபோது ஐந்து மேஜைகளில் உடற்குறைவு செய்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்களும், எட்டு மேஜைகளில் உடற்கூறு ஆய்வு செய்ததாக அமைச்சர் ரகுபதியும் மாறி மாறி கூறியிருக்கும் நிலையில் இதில் உண்மை என முன்னால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ்பிரஸ் கூறி இருப்பதாவது:
கரூரில் தவெக கூட்டத்தில், நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேர் உடல்களை, 5 மேஜைகளில் 25 மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தார்கள் என்று, நேற்று சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.
ஆனால், சட்டப்பேரவைக்கு வெளியே பேசிய சட்டத்துறை அமைச்சர், 8 மேஜைகளில் பிரேத பரிசோதனை நடைபெற்றது என்று கூறியிருக்கிறார்.