உண்மை வெளிவரும்.. நான் இருக்கேன் கலங்காதீங்க! - புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகளை தேற்றிய விஜய்!

Prasanth K

வெள்ளி, 17 அக்டோபர் 2025 (10:08 IST)

கரூர் சம்பவத்திற்கு பிறகு நீண்ட நாள் கழித்து பனையூர் கட்சி அலுவலகம் வந்த விஜய் நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.

 

கரூர் கூட்டநெரிசல் மக்கள் பலி தொடர்பாக தவெக மாவட்ட நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தவெக மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட தவெக நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டதோடு, புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய அமைக்கப்பட்ட தனிப்படையும் திரும்ப பெறப்பட்டது. அதை தொடர்ந்து நீண்ட நாள் கழித்து புஸ்ஸி ஆனந்த் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள் சென்னையில் உள்ள விஜய்யின் பனையூர் கட்சி அலுவலகத்தில் விஜய்யை சந்தித்தனர்.

 

அவர்களை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லிய தவெக தலைவர் விஜய் “எல்லாவற்றையும் சமாளிப்போம். உண்மை கண்டிப்பாக வெளியே வரும். நான் இருக்கிறேன். பயப்படாதீர்கள். பாதிக்கப்பட்ட நம் குடும்ப சொந்தங்களை பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் பற்றிய விவரங்களை எப்போதும் எனக்கு தெரியப்படுத்துங்கள். நான் விரைவில் கரூர் வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பேன்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்