பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

Mahendran

புதன், 15 அக்டோபர் 2025 (17:34 IST)
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக பஞ்சாப் போன்ற மாநிலங்களில், அத்துமீறி நுழையும் டிரோன்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தன. இதன் எதிரொலியாக, பாகிஸ்தானை ஒட்டியுள்ள எல்லை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
 
எல்லைப் பாதுகாப்புப் படையினர் 24 மணி நேரமும் நவீன கருவிகள் மற்றும் விரிவான கண்காணிப்பு மூலம் வான்வழி மற்றும் தரைவழி சட்டவிரோத நடவடிக்கைகளை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
 
இந்த ஆண்டு இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம், எல்லை தாண்டி வந்த 200 டிரோன்கள் வழிமறிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், டிரோன்கள் மூலம் கடத்த முயன்ற போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
இந்த ஆண்டு, இதுவரை இல்லாத வகையில், 16 பாகிஸ்தானியர்கள் உட்பட மொத்தம் 219 கடத்தல்காரர்கள் எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 287 கிலோ ஹெராயின் மற்றும் 13 கிலோ மெத்தம்பெட்டமைன். மேலும்174 ஆயுதங்கள், 12 கையெறி குண்டுகள், 10 கிலோவுக்கு அதிகமான உயர் ரக வெடிபொருட்கள்.
 
இந்த நடவடிக்கைகள் மூலம் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்றவர்கள் வெற்றிகரமாகத் தடுக்கப்பட்டுள்ளனர் என்று எல்லைப் பாதுகாப்புப் படை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்