நாமக்கல் சிறுநீரக முறைகேடு வழக்கு: சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவால் பரபரப்பு..!

Mahendran

வெள்ளி, 10 அக்டோபர் 2025 (16:23 IST)
சட்டவிரோத சிறுநீரக தானம் முறைகேடு வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நாமக்கல் பகுதியில் ஏழை தொழிலாளர்களை ஏமாற்றி சிறுநீரகம் தானம் பெற்ற விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்டது.
 
இந்த அதிகாரியின் நியமனத்தை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. "சிறப்பு புலனாய்வு குழுவை எதிர்க்கவில்லை, அதிகாரியை நியமித்ததை மட்டுமே எதிர்க்கிறோம்" எனத் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
 
ஆனால், தமிழக அரசின் இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்த உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்