கியா ரே செட்டிங்கா...? முதல்வரிடம் அடி பணிந்த கருணாஸ்

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (15:24 IST)
கருணாஸின் முக்குலத்தோர் புலிகள் படை கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுகவின் தோழமை கட்சியாக இருந்தது. பின்னர் இரட்டை இலை சின்னத்தில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாஸ்.  
 
கடந்த ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி அரசை கடுமையாக விமர்சித்தார். நகர் போலீஸ் உயரதிகாரி அரவிந்தனுக்கு மிரட்டல் விடுத்தார். கூவத்தூரில் நான் இல்லாமல் இந்த ராஜாங்கத்தை பழனிச்சாமியால் அமைத்திருக்க முடியுமா என காரசார கேள்விகளையும் முன்வைத்தார். 
 
இதையடுத்து கருணாஸ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். ஜெயிலில் இருந்த வந்த கையோடு, சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவர புகார் அளித்தார். 
இப்படி எல்லாம் செய்த அவர் இன்று, சபாநாயகருக்கு எதிரான புகாரை வாபஸ் பெற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். 
 
இது குறித்து கேட்டதற்கு தனிப்பட்ட காரணங்களுக்காக நான் முதல்வரை சந்திக்கவில்லை, தொகுதிக்காகவே சந்தித்தேன். சபாநாயருக்கு எதிரான தீர்மானத்தில் எனக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை எனவே அதை வாபஸ் பெற்றேன் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் நான் முதல்வருக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன் என்பதை மறைமுகமாக சொல்லியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்