ஜெயலலிதா நலம் பெற கருணாஸ் சிறப்பு பூஜை!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2016 (15:15 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் தொடர் சிகிச்சையில் உள்ளார் அவர்.


 
 
முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று விரைவில் இல்லம் திரும்ப அவருக்காக பல சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகிறது. அதிமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் முதல்வருக்காக சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் அதிமுகவின் கூட்டணியில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு திருவாடனை தொகுதியில் வெற்றி பெற்ற நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற சிறப்பு பூஜை நடத்துகிறார்.
 
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நடக்கும் இந்த சிறப்பு பூஜையில், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன், அன்வர் ராஜா எம்பி, மாவட்ட செயலாளர் முனியசாமி, உள்ளிட்ட அதிமுக மற்றும் முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இந்த பூஜையின்போது 500 பேருக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்