விஜய் படத்திற்காக குரல் கொடுத்த கருணாநிதி!

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (18:49 IST)
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதிக்கு கடந்த 4 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
அவ்வப்போது அவரது உடல் நிலை மோசமடைந்தாலும், மருத்துவர்களின் சிகிச்சை காரணமாக அவர் உடல் நிலை சீரான நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அவரை குறித்த பல செய்திகள் பகிரப்பட்டு வருகிறது. 
 
தற்போது அவர், விஜய்யின் படம் சிக்கலில் இருந்த போது அவருக்கு ஆதரவாக கருணாநிதி பேசியுள்ளார். அந்த நிகழ்வு விரிவாக... நடிகர் விஜய் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான படம் தலைவா. அந்த படம் ரிலீஸ் ஆவதற்கு பெரும் சிக்கலை சந்தித்தது. 
 
அது அரசியல் படம் என இதனை வெளியிட கூடாது என பிரச்சனைகள் உருவானது. அப்போது நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலிதாவை சந்திக்க சென்ற போது அது தோல்வியில் முடிந்ததாம். 
 
அப்போது கருணாநிதி, தலைவா படம் தம்பி விஜய் நடித்து ரசிகர்களால் ஆவலாக எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரசை தாக்குவது போன்ற வசனம் இருப்பதாக சொல்லப்படுகிறது. 
 
ஆனால், இது அரசியல் படம் இல்லை. யாரோ வதந்திகளை பரப்புகிறார்கள். அதனை நம்ப வேண்டாம் என கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்