மஞ்சள் துண்டும்... கருப்பு கண்ணாடியும்... கருணாநிதியின் டிரேட் மார்க் பின்னணி என்ன?

செவ்வாய், 31 ஜூலை 2018 (15:43 IST)
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களாக உடல் நலகுறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், அவரது கையசைவை காண பல தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு காத்துக்கிடக்கின்றனர். மேலும், பல அரசியல் தலைவர்களும் அவரை சந்தித்து, அவரது உடல் நலம் குறித்து நலம் விசாரித்தனர்.   
 
இந்த சூழ்நிலையில், அவரை பற்றிய பல செய்திகளும், பல தெரிய தகவல்களும் வெளியாகின்றன. தனது 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் வெற்றி நடைபோட்டு பயணித்த திமுக தலைவர் கருணாநிதியின் தனிப்பட்ட அடையாளமாக இருப்பது அவரது தமிழ், மஞ்சள் துண்டு மற்றும் கருப்பு கண்ணாடி.
 
இந்த கருப்பு கண்ணாடியின் பின்னணியில் உள்ள விஷயத்தை தெரிந்துக்கொள்ளுங்கள். கருணாநிதி 1971 ஆம் ஆண்டில் இருந்து கருப்பு கண்ணாடி அணிய துவங்கினார். அமெரிக்காவில் உள்ள ஜான் ஹிப்கின்ஸ் மருத்துவமனையில் இவருக்கு அறுவை சிகிச்சை செய்த பின்னர் கண்ணாடி அணிய துவங்கினார். 
 
இந்த கருப்பு கண்ணாடியை அவர் 46 ஆண்டுகள் அணிந்திருந்தார். பழைய கருப்பு கண்ணாசி அதிக எடை உடையதாக இருந்த்தால், இதனை 40 நாட்கள் தீவிர ஆலோசனைக்கு பிறகு விஜயா ஆப்டிகல்ஸ் மூலம் மாற்றினார். 
 
இந்த கண்ணாடி ஜெர்மெனியில் இருந்து வரவழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை இந்த கண்ணாடியைதான் கருணாநிதி அணிந்துக்கொண்டிருக்கிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்