தல படத்தை இயக்கப்போவது இவரா? புதிய திருப்பம்

செவ்வாய், 31 ஜூலை 2018 (15:22 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜீத் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஆந்திராவில் இரண்டு கட்டங்களாக நடந்தது.  இந்த படம் கிராமத்து பின்னணியை கொண்ட கதைக்களமாகும். வீரம் படத்தை போல் அண்ணன் தம்பி பாசக்கதையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



அடுத்து அஜித் யாருடன் சேர்ந்த படம் பண்ண போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிவாவைத் தொடர்ந்து அஜித் அடுத்து வினோத் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் கிரீடம் இயக்குனர் விஜய்யிடமும் அஜித் கதை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


மேலும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், அவை பவன் கல்யாண் படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்