கருணாநிதி சாதாரண அரசியல்வாதி அல்ல: ராகுல்காந்தி

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (19:40 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர்  ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:

கருணாநிதியின் வீடு மிகப்பெரியதாக இருக்கும் என நினைத்துக்கொண்டு அங்கு சென்றேன். பலப்பல ஆண்டுகளாக அரசியலில் தலைவராக இருப்பவரின் வீடு எளிமையாக இருந்ததை கண்டு வியந்து போனேன்.

கருணாநிதி சாதாரண அரசியல்வாதி அல்ல; அவர் தமிழக மக்களின் குரலாக ஒலித்தார். தமிழக மக்களின் மகிழ்ச்சியையும், வலிமையையும் தன்னுடையதாக கருதியவர் கருணாநிதி  

உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றை மத்திய அரசு சீரழித்துவிட்டது. நாட்டின் கலாச்சாரத்தை, பண்பாட்டை மதிக்க வேண்டியதில்லை என நினைக்கும் அரசு மத்தியில் உள்ளது. இந்தியாவை சீரழிக்கும் இந்த அரசை நீடிக்க வைக்க கூடாது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்