பிரதமர் வெளிநாட்டுப் பயணத்துக்கு எவ்வளவு செலவு தெரியுமா...?

ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (11:12 IST)
பாரத பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கு கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை ரூ. 2012 கோடி செலவாகி இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மோடி அடிக்கடி வெளிநாடு செல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் என எதிர்கட்சிகள் விமர்சனம் கூறிவருகின்றனர்.
 
இந்நிலையில் பாராளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி பினோய் விஸ்வம்  பிரதமராக மோடி பதவியில் அமர்ந்தபின் எந்தெந்த நாடுகளுக்கு சென்றுள்ளார்.அதற்கு எவ்வளவு செலவு செய்துள்ளார்.என்று கேள்வி எழுப்பினார்.
 
இதற்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை இணைஅமைச்சர்  விகே.சிங் பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் 84 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இதற்காக அரசுக்கு ரூ. 2012 கோடி செலவாகி உள்ளதாகவும், மோடி பயணம் செய்த ஏர் இந்திய விமானப் பராமரிப்பு செலவுக்காக மட்டும் ரூ. 1583 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்