கன்னியாக்குமரி பகவதி அம்மன் கோவிலில் தீ! – பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (11:09 IST)
கன்னியாக்குமரியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாக்குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் உள்ளது புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில். பொதுவாக கன்னியாக்குமரி சுற்றுலா வரும் பயணிகள் பகவதி அம்மன் கோவிலுக்கும் வருவது வழக்கம். ஆனால் தற்போது முழு முடக்கம் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் அவ்வபோது கோவில் ஊழியர்கள் மட்டும் பூஜை உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல கோவிலில் ஊழியர்கள் பூஜை செய்து கொண்டிருந்தபோது கோவிலின் மேற்கூரை திடீரென தீப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறிந்து உடனடியாக விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்துள்ளனர். இந்நிலையில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்