தமிழகம் வந்த தடுப்பூசிகள்; கோவைக்கு அதிக தடுப்பூசிகள் ஒதுக்கீடு!

புதன், 2 ஜூன் 2021 (10:42 IST)
மத்திய அரசு தொகுப்பின் கீழ் தமிழகம் வந்தடைந்த தடுப்பூசிகளில் கோயம்புத்தூருக்கு அதிக அளவில் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதால் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசின் தொகுப்பின் கீழ் தமிழகத்திற்கு 4.95 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அவற்றை மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் சென்னைக்கு அடுத்து அதிகமான தடுப்பூசிகள் கோவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்