எம்ஜிஆரின் மடியில் வளர்ந்த செல்லப்பிள்ளை நான்! – வீடியோவோடு புறப்பட்ட கமல்ஹாசன்!

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (15:55 IST)
மதுரை பிரச்சாரத்தில் எம்ஜிஆரின் நீட்சி நான் என கமல்ஹாசன் பேசியதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் ‘எம்ஜிஆரின் நீட்சி நான்’ என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கமல்ஹாசன் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட நினைப்பது நியாயமல்ல என்ற ரீதியில் அதிமுகவினரும் பேசி வந்தனர். இந்நிலையில் தற்போது எம்ஜிஆர் தனக்கு சால்வை அணிவிக்கும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும்.” என பதிவிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்