ரஜினி கட்சி பதிவு செய்யப்பட்டதா?? ரஜினி மக்கள் மன்றம் அதிரடி அறிக்கை !!!

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (15:23 IST)
ரஜினி மக்கள் மன்றத் தலைமையிடமிருந்து அதிகாராப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் வரை ரஜினிமக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என ரஜினி மக்கள் மன்றம் வி.எம்ம்.சுதாகர் சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.#RajiniMakkalMandram

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கட்சி பெயர், சின்னம் உள்ளிட்டவை குறித்தும், கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவது குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார்.#Rajinikanth
 
அதற்கு பிறகு ரஜினி தொடங்கும் புதிய கட்சியின் பெயர் “மக்கள் சேவை கட்சி” என்று பெயரிடப்பட்டுள்ளதாக தற்போது அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு சின்னமாக பாபா திரைப்படத்தில் ரஜினி காட்டு இரட்டை விரல் சின்னம் கோரப்பட்டதாகவும் ஆனால் அதை மறுத்துள்ள தேர்தல் ஆணையம் அதற்கு பதிலாக ஆட்டோவை சின்னமாக வழங்கியுள்ளது என தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ரஜினி துவங்க இருக்கும் கட்சியின் பெயர் “மக்கள் சேவை கட்சி” என கூறப்பட்டு வந்த நிலையில் மக்கள் சேவை கட்சியை பதிவு செய்தது தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளரின் சென்னை வீட்டு முகவரியில் மக்கள் சேவை கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது ரஜினி மக்கள் மன்றம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி அதிலிடம்  பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயர்ய்ம் சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமையிலிருந்து அதிகாரபூர்வமான தகவல் வெளியிடப்படும்வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் . நிவாகி விம்.எம்.சுதாகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
#RajiniMakkalMandram

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்