தமிழ்நகரில் தலைநிமிர்ந்து நிற்கும்கலைஞர் நூற்றாண்டு நூலகம்!- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
புதன், 12 ஜூலை 2023 (22:13 IST)
தமிழக அரசு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு  விழாவை கொண்டாடி வருகிறது.  இந்த  நிலையில், சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் சங்கத் தமிழ்க் கவிதைகளுக்குத் தன் தங்கத் தமிழ் வரிகளால் அணி சேர்த்த கலைஞரின் பெயரில் மாபெரும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை ஜூலை 15 அன்று பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளில் திறந்து வைக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்தமுதல்வர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில்,

‘’#கலைஞர்100-இல் இதுவரை அமைக்கப்பட்ட மருத்துவமனை, நூலகம், கோட்டம் ஆகியவையும் இன்னும் அமையவிருப்பவையும் காலம் கடந்து நிற்கும்! மக்களுக்கு என்றென்றும் பயன் தரும்! கலைஞரின் புகழை உரக்கச் சொல்லும்!

முதல்வர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில்,
2 இலட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், குரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டு 120 கோடியே 75 இலட்ச ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

 
அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம்,செய்தி - நாளிதழ் சேமிப்பு, நூல் கட்டும் பிரிவு. தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டுக் கூடம், ஓய்வறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகைப் பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கைப் பிரிவு. முதல் தளத்தில் கலைஞர் பகுதி, குழந்தைகள் நூலகம், நாளிதழ்கள் - பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு.

இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் உள்ளன. நான்காவது தளத்தில், எதிர்காலக் கனவுகளுடன் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர் மற்றும் இளைஞர்களின் கனவு நனவாகும் வகையில் ஏறத்தாழ 30 ஆயிரம் புத்தகங்களுடனான பகுதி.

ஐந்தாவது தளத்தில் மின்னணுத் தொழில்நுட்பத்தின் வாயிலாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் தருவதற்கான பகுதி உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

ஆறாவது தளத்தில் நூல் பகுப்பாய்வு, நூல் பட்டியல் தயாரித்தல் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் சார்ந்த பகுதிகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்