’பீஸ்ட்’ இந்தி வசனம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (15:31 IST)
’பீஸ்ட்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்தி மொழியை வசனம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார் 
 
’பீஸ்ட்’ திரைப்படத்தில் ஹிந்தி மொழி குறித்து விஜய் பேசும் வசனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தி மொழி பேசுபவர்கள் புரிய வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்தியை கற்றுக் கொள்ள முடியாது என்றும் நீங்கள் வேண்டுமானால் தமிழ் மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்றும் அவர் வசனம் பேசியிருந்தார்
 
 இந்த வசனம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விஜய் கூறியது சரிதான் என்றும் எங்களை பொறுத்தவரை தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிக் கொள்கைதான் உறுதியுடன் இருக்கிறோம் என்றும் இந்தியைத் தொடர்ந்து எதிர்ப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்