விஜய் பேசிய வசனத்தை நானே பல இடங்களில் பேசி உள்ளேன்: அண்ணாமலை

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (15:29 IST)
விஜய் பேசிய இந்தி வசனத்தை நானே பலமுறை பேசியிருக்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
இன்று வெளியாகியுள்ள விஜய் நடித்த பீஸ்ட்  திரைப்படத்தில் ஹிந்தி மொழி குறித்து விஜய் ஒரு வசனம் பேசுவதாக காட்சி வருகிறது. அந்த காட்சியில் இந்தி மொழியை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும் உங்களுக்கு அவசியம் என்றால் தமிழ் மொழியை படித்துக் கொள்ளுங்கள் என்றும் விஜய் பேசுவதாக ஒரு வசனம் உள்ளது 
 
இந்த வசனம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கருத்தை கூறியுள்ளார். இந்தி மொழி குறித்து பீஸ்ட்  படத்தில் விஜய் பேசிய வசனத்தை நானே பல இடங்களில் பேசி உள்ளேன் என்றும் இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்துடன் முரண்பாடு ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்