ஏன் 144 தடை ரத யாத்திரைக்கு பொருந்தாது? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (18:43 IST)
நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு ஏன் ரத யாத்திரைக்கு பொருந்தாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 
விஷ்வ இந்து பரிஷத் சார்ப்பில் ராம ராஜ்ஜியம் ரத யாத்திரை தமிழகத்தில் நடைபெற கூடாது என அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
144 தடை உத்தரவு ஏன் ரத யாத்திரைக்கு பொருந்தாது என பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
144 தடை உத்தரவு ரத யாத்திரைக்கு பொருந்தாது. இந்த ரத யாத்திரை எவ்வித பிரச்சனையும் இல்லாமல் பயணிக்கவும், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மதச்சார்பற்ற நாடு என்கிற அடிப்படையில் ரத யாத்திரைக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
 
காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே குழப்பம் விளைவிக்க பார்க்கிறார்கள் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்