நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்தரவா? பொங்கிய கமல்

செவ்வாய், 20 மார்ச் 2018 (13:26 IST)
கேரளாவில் இருந்து இன்று காலை தமிழக எல்லைக்குள் வந்த வி.எச்.பி அமைப்பின் ராமராஜ்ய ரத யாத்திரைக்கு அதிமுக, பாஜக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த யாத்திரைக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்ட் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், ஜவாஹிருல்லா, வேல்முருகன், சீமான் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கைதாகியுள்ளனர்.

இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் ரதம் திட்டமிட்டபடி தனது யாத்திரையை தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:

சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக் காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு' என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு ஒருசில ஆதரவும், பலத்த எதிர்ப்பும் எழுந்துள்ளது. இதுகுறித்து கமல் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களில் ஒருசிலவற்றை தற்போது பார்ப்போம்

ஜனநாயக நாட்டில், யாத்திரை நடத்துவது அவரவர் உரிமை. இது வரைக்கும் அது சென்ற 5 மாநிலங்களில், ரதயாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்ற செய்தி வரவில்லை.. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம், அமளியால் போக்குவரத்து ,சட்டப்பேரவை பாதிப்பு என்ற செய்திகள்தான் வருகின்றன

— Damuloga seshadhri (@Karyakartadamu) March 20, 2018

பிரச்சனை இல்லாம 5 மாநிலங்கள கடந்து வந்த யாத்திரைக்கு இங்க மட்டும் பொங்குறானுங்கன்னா... பிரச்சனை உங்ககிட்ட இருக்கு சில்ற....

— விசுவாசமான கோகுல்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்