என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி

செவ்வாய், 20 மார்ச் 2018 (15:01 IST)
புதுக்கோட்டையில் பெரியார் சிலையை உடைத்தது காட்டு மிராண்டித்தனம் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

 
அரசியலில் இறங்கப்போவதாய் அறிவித்த ரஜினிகாந்த், சில நாட்களுக்கு முன்பு இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயனம் சென்றார். அங்கு பல இடங்களுக்கும் சென்று வழிபட்ட அவர் இன்று சென்னை திரும்பினார். 
 
அதன் பின் போயஸ்கார்டனில் அவரின் இல்லத்தின் அருகே செய்தியாளர்களிடம் பேட்டியளித்த் அவர் “ஆன்மிக பயணம் சென்று வந்த பிறகு மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனம். ரத யாத்திரை என்பது மத கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மதக் கலவரம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை அரசு அடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என அவர் கூறினார்.
 
அதேபோல், என் பின்னால் பாஜக இல்லை. கடவுளும், மக்களுமே என் பின்னால் உள்ளனர். காவிரி மேலாண்மை அமைக்க  மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தர வேண்டும். என்னைப் பற்றி கமல்ஹாசன் கருத்துக்கு நான் பதில் கூற விரும்பவில்லை எனக் கூறினார். 
மேலும், சினிமாத்துறையினர் நடத்தி வரும் போராட்டம் பற்றி கருத்து தெரிவித்த அவர், சினிமாத்துறையில் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என எப்போதும் நான் கூறுவேன் என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்