ரத யாத்திரையை லெட்டர்பேட் கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

செவ்வாய், 20 மார்ச் 2018 (12:12 IST)
விஸ்வ இந்து பரிசத் அமைப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் உத்தரபிரதேசத்தில் தொடங்கிய ரத யாத்திரை மகாராஷ்டிரா, கர்நாடகம், கேரளா உள்பட பல மாநிலங்களை கடந்து இன்று தமிழக எல்லைக்குள் வந்துள்ளது.

நேற்று வரை இப்படி ஒரு ரத யாத்திரை நடப்பதே பலருக்கு தெரியாது. சுமாரான மெர்சல் படத்தை எச்.ராஜாவும் தமிழிசையும் விளம்பரப்படுத்தி சூப்பர் ஹிட் ஆக்கியது போல், அமைதியாக விளம்பரமின்றி அதைவிட முக்கியமாக பெரும்பாலானோர்களால் கண்டுகொள்ளாமல் நடந்த இந்த ரத யாத்திரையை தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் தற்போது தேசிய அளவில் விளம்பரப்படுத்திவிட்டார்கள்.

மதச்சார்பின்மை கொள்கையை உடைய காங்கிரஸ் ஆளும் கர்நாடகம், கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் கேரளாவில் இந்த ரதம் வந்தபோது அம்மாநில அரசும், அங்குள்ள எதிர்க்கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. இங்குள்ள அரசியல்வாதிகள் கூவுவது போன்று அந்த மாநிலங்களில் எந்தவித வன்முறையும் மதத்தின் பெயரால் நடக்கவில்லை. லெட்டர் பேட் கட்சிகள் தங்கள் கட்சியை விளம்பரப்படுத்துவதற்காக எடுத்து கொண்ட விஷயம் தான் இந்த ரதயாத்திரை எதிர்ப்பு. இந்த விஷயத்தில் திமுகவும் தலையிட்டு கெட்ட பெயர் வாங்கி கொள்வதுதான் வேதனையான விஷயம். இந்த ரதயாத்திரையை கண்டுகொள்ளாமல் விட்டிருக்க வேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்