டெல்லி நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் இன்று ஆஜர்.. நீதிபதியின் அதிரடி உத்தரவு..!

Siva
திங்கள், 6 மே 2024 (13:07 IST)
ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் இன்று நீதிமன்றத்தில் ஆதார் படுத்தப்பட்ட நிலையில் நீதிபதி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது ரூபாய் 2000 கோடி போதை பொருள் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் இன்று அவர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் ஜாபர் சாதிக் உள்பட ஐந்து பேரின் நீதிமன்ற காவல் மே 29ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார் 
 
ஜாபர் சாதிக், சதானந்தம், முஜிபுர், முகேஷ், அசோக்குமார் ஆகிய ஐந்து பேரையும் மார்ச் 9ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர் என்பதும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாகவும் கூறப்பட்டது 
 
மேலும் ஐந்து பேரிடமும் திகார் சிறைக்கு சென்று வாக்குமூலம் பெற அமலாக்கத்துறைக்கு ஏற்கனவே நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் இன்றுடன் ஐந்து பேரின் நீதிமன்ற காவல் முடிவதால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதனை அடுத்து நீதிபதி 5 பேரின் காவலை மே 29ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டார்
 
இதனை அடுத்து மீண்டும் திகார் சிறையில் 5 பேரும் அடைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்