ஜாபர் சாதிக் நீதிமன்ற காவல் மே 6ஆம் தேதி வரை நீட்டிப்பு: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

Mahendran

புதன், 1 மே 2024 (14:41 IST)
போதைப்பொருள் கடத்தல் வழக்கில், ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவல் மே 6ஆம் தேதி வரை நீட்டிப்பு என டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில், கடந்த மார்ச் 9ஆம் தேதி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். ஜாபர் சாதிக் உள்பட 5 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில்  மே 6 வரை நீட்டிப்பு என டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
முன்னதாக ஜாபர் சாதிக் தொடர்புடையவர்களிடமும் விசாரணை நடந்து வரும் நிலையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக்கை விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
டெல்லி திகார் சிறைக்கு சென்று ஜாபர் சாதிக் உட்பட ஐந்து பேரிடம் மூன்று நாட்கள் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுனில் சங்கர் யாதவ் உள்ளிட்ட சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளதை அடுத்து இன்னும் ஓரிரு நாளில் அவர்கள் டெல்லி சென்று ஜாபர் சாதிக்கை விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்