நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் இருக்கிறதா.? அக்‌ஷனில் இறங்கிய காவல்துறை..!

Senthil Velan
வியாழன், 2 மே 2024 (16:36 IST)
நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு இன்று முதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வேப்பேரி சாலையில் காவலர் என ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்திற்கு ரூ.500 அபாராதம் விதித்த போக்குவரத்து  காவல் ஆய்வாளர் நடவடிக்கை மேற்கொண்டார்.
 
சென்னை பெருநகர வாகனங்களில் நம்பர் பிளேட் மற்றும் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.
 
முதற்கட்டமாக, இன்று போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிச் செல்லும் வாகனங்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டியவேலு,  வாகன நம்பர் பிளேட் ஸ்டிக்கர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக, காவல் துறை வாகனத்தில் இருந்து நாங்கள் இந்த நடைமுறையை ஆரம்பித்திருக்கிறோம் என்றார்.

ALSO READ: கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை.! சென்னையில் 13 பேர் கைது..!
 
குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் கூட அந்த ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு வாகனத்தில் செல்கின்றனர் என்றும் காவல்துறையிடம் இருந்து தற்காத்துக் கொள்ள அவர்கள் இப்படி செய்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். நம்பர் பிளேட்டுகளில் உள்ள ஸ்டிக்கரை அகற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்