முதல் முறை ரூ.500, 2வது முறை ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும் நம்பர் பிளேட்டில் உள்ள ஸ்டிக்கர்களை அகற்ற ஏற்கனவே போலீஸ் அறிவுறுத்திய நிலையில் இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் நம்பர் பிளேட்டை தவிர வேறு ஏதாவது எழுதப்பட்டிருந்தால், அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எனவே வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதுவும் ஒட்ட வேண்டாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.