ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீது நேற்று காவல்துறை நடத்திய வெறியாட்டம் தமிழகத்தையே அதிர வைத்தது. இந்த வன்முறைக்கு குறிப்பிட்ட ஒரு அமைச்சர் காரணமாக இருக்கலாம் என பிரபல தமிழ் வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் அவசரம் சட்டம் கொண்ட வந்து தமிழகத்தின் பல இடங்களை ஜல்லிக்கட்டை தமிழக அரசு முயற்சி செய்தது. ஆனால் பல இடங்களில் மக்கள் நிரந்தர தீர்வு கிடைக்காமல் ஜல்லிக்கட்டு நடத்த மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில், அதிமுகவின் முக்கிய அமைச்சர் ஒருவர் அவரது சொந்த ஊரில் முற்றுகையிடப்பட்டார். மாணவர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் அவரை சரமாரியாக கேள்வி கேட்டனர். இதனால் அந்த முக்கிய அமைச்சர் தனது சொந்த ஊரில் நேர்ந்த அவமானத்தின் காரணமாகவே போலீசாரை அவர் தூண்டி விட்டதாக பேசப்படுகிறது.
ஜல்லிக்கட்டுக்காக போரடிக்கொண்டிருந்த மாணவர்களிடம் போலீசார் போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். ஆனால் இது ஒருபக்கம் இருக்க தமிழகம் முழுவதும் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை அடுத்தடுத்து தாக்குதலை தொடங்கியது. பல இடங்களில் பெண்கள் மீதும் கடுமையனா தாக்குதல் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் இத்தனை நாட்களாக இளைஞர்களுடன் நட்புடன் பழகி வந்த காவல்துறை திடீரென தனது கோர முகத்தை காட்ட என்ன காரணம் என பலருக்கும் புரியாத புதிராக இருந்தது. ஜல்லிக்கட்டு நடத்த அவசரமாக சட்டம் கொண்டு வர முதல்வர் பன்னீர்செல்வமே டெல்லி புறப்பட்டு சென்று அங்கேயே தங்கி மூன்று துறைகளின் ஒப்புதலை சில மணி நேரங்களிலேயே பெற்று குடியரசுத்தலைவரின் ஒப்புதலையும் பெற்று தமிழகம் திரும்பினார் அவர்.
இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ள பன்னீர்செல்வம் காவல்துறை இப்படி நடந்து தனது இமேஜை குறைக்க அனுமதி அளித்திருக்க மாட்டார், இதற்கு பின்னணியில் வேறு யாரோ இருக்கிறார் என அதிமுக வட்டாரத்திலேயே பேசப்படுகிறது. அது அந்த முக்கியமான அமைச்சர் என்கிறார்கள்.