எடப்பாடி பழனிசாமி உறவினர் வீட்டில் தொடரும் சோதனை.. 3 வது நாளாக பரபரப்பு..!

Siva
வியாழன், 9 ஜனவரி 2025 (08:40 IST)
முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் ராமலிங்கம் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக சோதனை செய்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு பூந்துறை ரோடு செட்டிபாளையம் ஸ்டேட் வங்கி நகரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் உள்ள அரசுகளில் ஒப்பந்தம் செய்து இந்த நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், ராமலிங்கம் அவர்களின் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர். கடந்த இரண்டு நாட்களாக ராமலிங்கம் வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், இன்று மூன்றாவது நாளாகவும் சோதனை நடந்து வருகிறது.

 சென்னை அண்ணா சாலையில் உள்ள ராமலிங்கம் கட்டுமான நிறுவனம், ஆழ்வார்பேட்டை எஸ்பிஎல் அலுவலகம் ஆகியவற்றிலும் சோதனை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்