எடப்பாடி பழனிச்சாமியின் உறவினரான ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அரசு கட்டுமான பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து கொண்டிருக்கும் இந்நிறுவனத்தில், நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைகளை தொடங்கினர்.
ராமலிங்கம் அவர்களுக்கு சொந்தமான அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள், வெளியில் எந்த தொடர்பும் ஏற்படுத்த முடியாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் செய்த பின்னர், அங்கிருந்த கணினி பதிவுகளையும் ஆவணங்களையும் சோதனை செய்ததாக தெரிகிறது.
தமிழகத்தில் சேலம், திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் இந்நிறுவனத்தின் அலுவலகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அனைத்து அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரி ஏய்ப்பு காரணமாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று இரண்டாவது நாளாகவும் இந்த சோதனை நடந்து வரும் நிலையில், சோதனைக்கு பின்னரே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த விவரம் தெரியவரும்.