திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலி.. தமிழக முதல்வர் இரங்கல்..!

Siva
வியாழன், 9 ஜனவரி 2025 (08:33 IST)
திருப்பதி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியான பக்தர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் சொர்க்கவாசல் டோக்கன் கொடுப்பதாக கூறப்பட்ட தகவலை அடுத்து ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் கவுண்ட்டர் அருகே கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசல் அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்த நிலையில் இந்த இடிபாடுகளில் கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் உயிரிழந்த ஆறு பேரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்பிரக்கத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டில் சேர்ந்தவர்கள் உள்பட ஆறு பேர் உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது.

இந்த துரதிஷ்டமான சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன் என்று கூறியுள்ளார்.

 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்