அமலாக்கத்துறை சோதனை எதிரொலி: ED.. திடீரென டெல்லி புறப்பட்டு சென்ற அமைச்சர் துரைமுருகன்

Siva

ஞாயிறு, 5 ஜனவரி 2025 (09:53 IST)
கடந்த இரண்டு நாட்களாக அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டில் சோதனை அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், தற்போது அமைச்சர் துரைமுருகன் திடீரென டெல்லி சென்று இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக எம்பி கதிர் ஆனந்த் அவர்களுக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடந்த நிலையில், 44 மணி நேர சோதனை இன்று அதிகாலை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றதாகவும், அவருடன் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியானது.

டெல்லியில் அவர் யாரை சந்திக்கப் போகிறார் என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அமலாக்கத்துறை சோதனை குறித்து விஷயமாகத்தான் அவர் டெல்லி சென்று இருப்பார் என்று கூறப்பட்டு வருகிறது.
ஆனால், டெல்லி புறப்படுவதற்கு முன்பு அவர் அளித்த பேட்டியில், சோதனையில் ஒன்றும் கிடைக்கவில்லை என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர் என்று சிரித்த முகத்துடன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்