உடனடியாகப் பட்டா கிடைக்க ஏற்பாடு செய்வேன் - கமல்ஹாசன்

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (21:26 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இன்னும் குறைந்த நாளே தேர்தலுக்கு உள்ளதால் ஒவ்வொரு கட்சியும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை தெற்குத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் நடிகர் கமல்ஹாசன் ஆட்டோவின் சென்றும் பொதுமக்களைச் சந்தித்து வாக்குகள் சேகரித்துவருகிறார். இந்நிலையில் இன்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், அன்றாடம் கோவை தெற்குத் தொகுதியில் இருக்கும் காலனிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறேன். பல்லாண்டுகளாக இங்கே  குடியிருக்கும்  ஏழை எளிய மக்கள் பட்டா கிடைக்காமல் தவிக்கிறார்கள் அவர்களுக்கு உடனடியாகப் பட்டா கிடைக்க ஏற்பாடு செய்வேன். இந்தத் திட்டத்திற்கு "என் வீடு என் உரிமை" என பெயர் சூட்டியுள்ளேன். இன்று கோவை தெற்கில் துவங்கும் இந்தக் கடமை விரைவில் தமிழகமெங்கும் செயல்படுத்தப்படும் என உறுதி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்