பா. ரஞ்சித் இயக்கியுள்ள ’சர்பட்டா ‘படத்தின் முக்கிய அப்டேட் !

சனி, 27 மார்ச் 2021 (16:32 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

காலா படத்தின் வெளியீடு முடிந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு  பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா. இந்த படத்தில் ஆர்யாவோடு துஷாரா, கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் 1980களில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்ட இந்த படம் குத்துச்சண்டையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் லுக் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் சென்னையில் நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில இப்படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் சர்பட்டா படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என தெரிவித்துள்ளார்..

#Sarpatta update this evening. The match begins... @arya_offl @K9Studioz @officialneelam @pro_guna @urkumaresanpro

— pa.ranjith (@beemji) March 27, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்