தரையில் போட்டு தரதரவென இழுத்ததாக செந்தில் பாலாஜி கூறினார்: மனித உரிமை ஆணைய உறுப்பினர்

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (12:16 IST)
தரையில் போட்டு தரதரவென இழுத்ததாக செந்தில் பாலாஜி கூறினார்என மனித உரிமை ஆணைய உறுப்பினர் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்தார்.
 
இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
தன்னை இழுத்ததால் தலையில் காயம் ஏற்பட்டதாக செந்தில் பாலாஜி தெரிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி சோர்வாக காணப்பட்டார். தன்னை தாக்கியதாக சில அதிகாரிகளின் பெயர்களையும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்
 
பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில் நேரில் விசாரித்தேன் என்று கூறிய மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், தன்னை தரையில் போட்டு தரதரவென இழுத்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்தார் என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்து பெறப்பட்ட  தகவலின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் நாளை முடிவெடுக்கும் என்றும், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இதனை விசாரித்துள்ளது என்றும் கூறினார்.
 
தான் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்த பின்பும்  துன்புறுத்தியதாக செந்தில் பாலாஜி கூறினார் என்றும் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்தார். மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக திமுக சார்பில் தொலைக்காட்சிகளில் விவாதம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்