அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: நீதிமன்றம் உத்தரவு
வியாழன், 15 ஜூன் 2023 (11:07 IST)
நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிடப்பட்டுள்ளதால், நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரிய மனு செல்லத்தக்கதல்ல என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு, அமலாக்கப் பிரிவு காவலில் வைத்து விசாரிக்க கோரிய மனு மீது சற்று நேரத்தில் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.