மின்வாரிய ஊழியரை போலீஸ் தாக்கிய விவகாரம்: மனித உரிமை கமிஷன் அதிரடி ஆக்சன்

Webdunia
திங்கள், 22 ஜூன் 2020 (17:19 IST)
மின்வாரிய ஊழியரை போலீஸ் தாக்கிய விவகாரம்
இந்த ஊரடங்கு நேரத்தில் காவல்துறையினர் பொதுமக்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாகவும், ஊரடங்கை மீறுபவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சென்னை ஆவடியில் இ பாஸ் இல்லாமல் சென்ற மின்வாரிய ஊழியரை போலீசார் தாக்கியதாகவும், அந்த மின்வாரிய ஊழியர் தனது அடையாள அட்டையை காண்பித்த பிறகும் போலீசார் தாக்கியதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது
 
இந்த நிலையில் இதுகுறித்து மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி "சென்னை ஆவடியில் இ பாஸ் இல்லாமல் மின்வாரிய ஊழியர் ஒருவரை போலீஸ் கடுமையாக தாக்கியதாக முன்னணி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது
 
இந்த செய்தியின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி "சென்னை ஆவடியில் இ பாஸ் இல்லாமல் சென்ற மின்வாரிய ஊழியரை தாக்கிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்றும், மின்வாரிய பணியாளர் அடையாள அட்டை காண்பித்தும் அவரிடம் காவல் துறையினர் எப்படி இ - பாஸ் கேட்கலாம்? என்றும் இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 4 வாரத்தில் அறிக்கை வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமின்றி இ - பாஸ் விவகாரம் தொடர்பாக போலீசாருக்கு தகுந்த அறிவுறுத்தல் வழங்க டிஜிபி-க்கு மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்