மகிழ்ச்சியடைந்தவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை இது - கௌசல்யாவின் தாயார்

Webdunia
திங்கள், 22 ஜூன் 2020 (16:57 IST)
உடுமலை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு சற்று முன்னர் வெளியான நிலையில் இந்த தீர்ப்பில் முதல் குற்றவாளியன கௌசல்யாவின் தந்தை சின்னசாமி என்பவர் விடுதலை செய்யப்பட்டார். அதேபோல் கௌசல்யாவின் தாய் விடுதலையை எதிர்த்து காவல்துறையினர் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் இந்த வழக்கிலிருந்து கௌசல்யாவின் தாய் தந்தை ஆகிய இருவருமே விடுதலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்து கவுசல்யாவின் தாய் கூறியதாவது : உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. என் கணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.  மரணதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளவர்கள் விரைவிலெயே தண்டனை குறைப்பு செய்ய முறையீடு செய்யவுள்ளேன். மேலும் எங்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்ததாக மகிழ்ச்சியடைந்தவர்களுக்கு அந்தக் இறைவன் கொடுத்த தண்டனையாக இதைக் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்