மதுரை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து: இ-பாஸ் கெடுபிடி காரணமா?

புதன், 27 மே 2020 (08:04 IST)
மதுரை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து
ஊரடங்கு உத்தரவில் பிறப்பிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக நேற்று முன் தினம் முதல் உள்ளூர் விமான சேவையும், நேற்று முதல் சர்வதேச விமான சேவையும் தொடங்கப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் வெவ்வேறு நகருக்கு செல்ல தொடங்கின.
 
இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு பின் மதுரை விமான நிலையத்திலிருந்து கடந்த இரண்டு நாட்களாக சென்னை, டெல்லி, பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு, 12 விமான சேவைகள் தொடங்கின. ஆனால், கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள இ பாஸ் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளால், பயணிகள் பலர் பயணிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்த பயணிகள் திருப்பி அனுப்பப்படும் செய்திகள் வெளியானதால் இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்ய பயணிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இ-பாஸ் விண்ணப்பித்தவுடன் அனைவருக்கும் உடனே கிடைப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில், போதிய பயணிகள் இல்லாததால், மதுரை, சென்னை இடையிலான இரண்டு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துள்ளதாகவும், மதுரையில் இருந்து டெல்லி, பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய  நகரங்களுக்கு கிளம்ப வேண்டிய 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பில் மதுரை, சென்னை இடையே இரண்டு விமானங்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுவதாக கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்