10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இ-பாஸ்: நடைமுறையில் சாத்தியமா?

ஞாயிறு, 17 மே 2020 (10:21 IST)
தமிழகத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு தேர்வு ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் ஜூன் 1ம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் 12 வரை நடைபெறவிருக்கும் இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சமீபத்தில் பேட்டியளித்தார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பலர் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று உள்ளனர். அவர்கள் எப்படி ஜூன் 1-ஆம் தேதிக்குள் மீண்டும் தேர்வு மையத்திற்கு வர முடியும் என்ற சிக்கல் எழுந்துள்ளது
 
இதனை அறிந்த தமிழக அரசும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இபாஸ் வழங்க உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் மாணவர்கள் மட்டும் தனியாக எப்படி வரமுடியும்? மாணவர்களின் பெற்றோர்களுக்கும் இபாஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது 
 
பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இபாஸ் வழங்குவதில் நடைமுறைச் சிக்கல் இருக்கும் என்றும் இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியே இபாஸ் கொடுத்தாலும் அவர்களுக்கு வாகன வசதிகள் செய்து தரவேண்டும்  என்றும் கூறப்படுகின்றது. இதனை அடுத்து இந்த பிரச்சனையை தமிழக அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைத்து மக்களிடமும் உள்ளது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்