தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் மழை நீடிக்கும்? விரிவான விபரம்

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (13:43 IST)
தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் மழை நீடிக்கும்? எந்தெந்த மாவடங்களில் எத்தனை அளவு மழை நீர் பதிவாகி உள்ளது என்று சென்னை வானிலை மண்டல இயக்குனர் புவியரசன் விரிவான விளக்கத்தை கொடுத்துள்ளார். 
 
அதன்படி, இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழையும் எனவும்  ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளார். 
 
மேலும், கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  கன மழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறியுள்ளார். 
 
12.01.2021: தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  கன மழையும், ஏனைய மாவட்டங்களில்  லேசானது முதல் மிதமான மழையும் பெய்யகூடும் .
 
13.01.2021: தென் தமிழகத்தில்  ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும். 14.01.2021 மற்றும் 15.01.2021 : தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யகூடும். அதிகபட்ச வெப்பநிலை 30  குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கன மழையும் பதிவாகியுள்ளது.  
 
ஜனவரி 11  முதல் ஜனவரி 12ல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் ,  குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர்  வேகத்தில் வீசக்கூடும்.  ஜனவரி 12 – ஜனவரி 13 ஆகிய தேதிகளில் கேரள கடலோர பகுதி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் ,லட்சத்தீவு பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர்  வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்  அறிவுறுத்தியுள்ளார்.                                     
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்