தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை!

சனி, 9 ஜனவரி 2021 (13:02 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. 

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் மிகப்பெரிய அளவில் பெய்தது என்பதும் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து வந்ததால் பெய்த கனமழையின் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல நீர்நிலைகள் நிரம்பி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.  
 
மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனவரியிலும் தற்போது மழை பெய்து வருவது பெரும் ஆச்சரியத்தை அளித்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. 
 
அதாவது தூத்துக்குடி, ராமநாதபுரம், குமரி, சிவகங்கை, தங்சை, திருவாரூர், நாகை, காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்