சென்னை வெள்ளம் எதிரொலி: வீடுகளை சுத்தம் செய்யும் நிறுவனங்களுக்கு அடித்த ஜாக்பாட்..!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (17:58 IST)
சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல வீடுகளில் மழை தண்ணீர் புகுந்துள்ளதை அடுத்து தற்போது வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் வீட்டின் உரிமையாளர்கள் உள்ளனர். 
 
குறிப்பாக வீடுகளை சுத்தம் செய்து தரும் தனியார் நிறுவனங்களை அணுகி வீடுகளை சுத்தம் செய்து வருகின்றனர். சாதாரணமான நாட்களில் வீடுகளை சுத்தம் செய்ய 3000 முதல் 4000 வரை வசூலித்த தனியார் நிறுவனங்கள் தற்போது 7000 முதல் 9000 வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 
 
குறிப்பாக வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை, வடசென்னை ஆகிய பகுதிகளில் வீடுகளை பொதுமக்கள் சுத்தம் செய்ய முடியாமல் தனியார் நிறுவனங்களை அணுகிய நிலையில் அவர்கள் அதிக கட்டணங்களை வசூலித்து வருவதால் இந்த நிறுவனங்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளதாக கருதப்படுகிறது 
 
ஆனால் இது குறித்து வீடுகளை சுத்தம் செய்யும் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறிய போது ’ஒரே நேரத்தில் பல வீடுகளில் சுத்தம் செய்ய அழைப்பு வந்ததை அடுத்து தற்காலிக ஊழியர்களை அதிகம் பணியமர்த்தி உள்ளோம் என்றும் அவர்களுக்கு அதிகமாக சம்பளம் கொடுக்க வேண்டி உள்ளதால் கட்டணமும் அதிகமாக வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்