ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பிரமிளா பரபரப்பு குற்றச்சாட்டு!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (10:28 IST)
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ நிறுவனத்தின் சி,.இ,ஓ ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பிரமிளா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளதால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஜோஹோ நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு கலிபோர்னியாவில் வாழ்ந்து வரும் நிலையில் தன்னையும் தனது ஆட்டிசம் குறைபாடு உள்ள மகனையும் நிர்கதியாக  விட்டுவிட்டு சென்று விட்டதாக அவரது மனைவி பிரமிளா குற்றம் சாட்டியுள்ளார்.
 
ஜோஹோ சிஇஓ ஸ்ரீதர் வேம்பு ஆட்டிசம் குறைபாடு உள்ள தன் மகனையும் தன்னையும் 2020 ஆம் ஆண்டு நிர்கதியாக  விட்டு விட்டு சென்று விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். கலிபோனியாவில் தnனுடன் வாழ்ந்த காலத்தில் அவர் ஜோகோ நிறுவனத்தின் தனது பெயரில் இருந்த பங்குகளை தனக்கு தெரியாமல் அவரது சகோதரி மற்றும் சகோதரி கணவர் பெயருக்கு வேம்பு மாற்றிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 
 
கலிபோர்னியாவின் சட்டத்தின்படி மனைவியின் ஒப்புதல் இல்லாமல் கணவர் சொத்துக்களை விற்க முடியாது என்று இருப்பதை அடுத்து வேம்பு தனது உறவினர் பெயர்களில் சொத்துக்களை மாற்றியது சட்டவிரோதம் என்றும் பிரமிளாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்