வேளாண் நிதிநிலை அறிக்கைக்காக பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் கோரிக்கை

திங்கள், 13 மார்ச் 2023 (23:07 IST)
பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் மொத்தம் 20 கோரிக்கைகள்  எப்படி செயல்படுத்த முடியும், வேறு எங்கெல்லாம் அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதனை பற்றி விரிவாக எழுதி  44 பக்கங்கள் கொண்ட  புத்தகமாக வழங்கியுள்ளனர்.
 
 
2023- 2024ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கைக்கான பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் கோரிக்கைகள்/ கருத்துக்களை மாண்புமிகு அமைச்சர் திரு. எம். ஆர். கே . பன்னீர்செல்வம் மற்றும் பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேறு சில துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் இருப்பதால் அந்தந்த துறையின் அமைச்சர்களுக்கும், துறை அதிகாரிகளுக்கு, கருத்துக்களை அனுப்புவதற்கு அரசு அளித்த மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டது. 
 
மொத்தம் 20 கோரிக்கைகள் சுருக்கமாகவும், அதனை எப்படி எல்லாம் செயல்படுத்த முடியும், வேறு எங்கெல்லாம் அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதனை விரிவாக எழுதியும் 44 பக்க புத்தகமாக வழங்கியுள்ளோம்.  ஒரு சில கோரிக்கைகள் ஏற்கனவே பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தால் செயல்படுத்தப்பட்டதால்  அதனைப்பற்றிய ஊடக செய்திகளையும் சேர்த்தே அனுப்பி உள்ளோம். 
 
பசுமைக்குடியின் கோரிக்கைகளையும் கருத்துகளையும் அனைத்து சமூக ஆர்வலர்களும் படித்து இதனை நிறைவேற்றி இயற்கையினை காக்க உதவுங்கள்
.
தங்கள் அன்புள்ள,
 
நரேந்திரன் கந்தசாமி 
நிறுவனர் 
பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் 
+91 91761 86934
+1 7819210728
[email protected]
பாஸ்டன், மசாசூசெட்ஸ், அமெரிக்கா 
வ. வேப்பங்குடி, கடவூர் வட்டம், கரூர் மாவட்டம், 621 301
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்