பங்குச்சந்தை தொடர் வீழ்ச்சி.. எப்போது தான் உயரும்?

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (10:21 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இன்று மீண்டும் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்காவை சேர்ந்த இரண்டு முக்கிய வங்கிகள் திவால் ஆனதை அடுத்து உலகம் முழுவதிலும் உள்ள பங்குச்சந்தையில் அதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. 
 
அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை சரிந்து வரும் நிலையில் இன்றும் சென்செக்ஸ் மற்றும் நிப்டி மீண்டும் சரிந்து உள்ளது. 
 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 150 புள்ளிகள் சரிந்து 58 ஆயிரத்து 80 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 55 புள்ளிகள் சார்ந்து 17098 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்