இந்த நிலையில் சிந்தூர் என்ற பெயர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகிவிட்டது. இந்த பெயரில் படம் தயாரிக்க கூடாது என சில தயாரிப்பாளர்கள் முன்வந்தனர். இந்நிலையில் மே 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என அந்த குழந்தைகளின் பெற்றோர் பெயரிட்டதாக குஷிநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் சில குழந்தைகளுக்கு இந்த பெயரை வைக்க பெற்றோர் விரும்பி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஒரு குழந்தையின் பெற்றோர் கூறிய போது, “இந்த பெயரால் நாங்கள் பெருமைப்படுகிறோம். சிந்தூர் என்பது ஒரு வார்த்தை அல்ல, உணர்ச்சி. எங்கள் மகளுக்கு சிந்தூர் என பெயரிட முடிவு செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தனர்.