விஜயகாந்த் மீதான பிடிவாரண்ட் ரத்து

Webdunia
புதன், 6 டிசம்பர் 2017 (16:17 IST)
செய்தியாளரை தாக்கிய வழக்கில் ஆலந்தூர் நீதிமன்றம் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்திற்கு பிறப்பித்த பிடிவாரண்ட்டை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு செய்தியாளரை தாக்கியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் பலமுறை ஆணை பிறப்பித்தும் ஒருமுறை கூட விஜயகாந்த் ஆஜராகாததாக தெரிகிறது.
 
இந்நிலையில் விஜயகாந்திற்கு பிடிவாரண்ட் வழங்கி சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் நேற்று தீர்பளித்தது. விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதால் பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரி அவரின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மனுவை ஏற்றுக்கொண்டு விஜயகாந்தின் பிடிவாரண்டை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்