துணை முதல்வர் ஓபிஎஸ் உடன் நடிகை வரலட்சுமி திடீர் சந்திப்பு

Webdunia
புதன், 6 டிசம்பர் 2017 (15:59 IST)
நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி இன்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்துள்ளார். 
 
இந்த சந்திப்பின்போது அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களிடம் கோரியதாகவும், துணை முதல்வரை அடுத்து தலைமை செயலாளரையும் சந்தித்து இதே கோரிக்கையை முன்வைத்ததாகவும் நடிகை வரலட்சுமி பேட்டியளித்துள்ளார்
 
நடிகை வரலட்சுமி பெண் திரையுலக கலைஞர்களுக்காக சேவ் சக்தி என்ற அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார் என்பதும், இந்த அமைப்பிற்கு திரைத்துறையில் உள்ள பெண் கலைஞர்கள், டெக்னீஷியன்கள் முழு ஆதரவு கொடுத்து வருகிறார்கள் என்பதும்  குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்