தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கனமழை !

Webdunia
சனி, 12 நவம்பர் 2022 (16:35 IST)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சில நாட்களுக்கு முன், வரும் 13 ஆம் தேதி வரை தமிழகத்தில்  பல மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, நேற்றிரவு 24 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பருவமழையால், சென்னையில் பல இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில்  கோவை,  நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென் காசி, விருது நகர்   உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ: என் வீட்டில் மழை நீர் புகுந்துள்ளது- ரஜினி பட இசையமைப்பாளர் டுவீட்
 
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், நாமக்கல்,   ராம நாதம்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்