செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வண்ணம் உள்ளது
செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து இதுவரை 500 கன அடி நீர் உபரிநீராக வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று மாலை 3 மணியிலிருந்து ஆயிரம் கன அடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது
இதன் காரணமாக உபரி நீர் செல்லும் கால்வாய் அருகில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் ஏரியின் நீர் அளவை 21 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன